தனுசு ராசி வைகாசி-2025 மாத பலன்கள்
![]() |
| தனுசு ராசி வைகாசி-2025 மாத பலன்கள் |
குருபகவானின் அமைப்பு மற்றும் அதன் தாக்கம்
குருவின் ஏழாம் இடப் பார்வை
தனுசு ராசி அன்பர்களே, இந்த வைகாசி மாதம் என்ன பலன், எப்படி இருக்கும் என்று பார்க்கும்போது, உங்கள் ராசி அதிபதியாக இருக்கக்கூடிய குருபகவான் ஏழாம் இடம், என்று சொல்லக்கூடிய திருமண ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்ப்பது ஒரு நல்ல தன்மையாகும். கடந்த ஒரு வருடமாகவே உங்கள் ராசி அதிபதி ஆறாம் இடம், என்று சொல்லக்கூடிய கடன், நோய், எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு என்று சொல்லக்கூடிய ஆறாம் இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நீங்கள் ஆறாம் இடத்தில் உட்கார்ந்து, ஒரு எதிரி ஸ்தானத்தில் உட்கார்ந்து, ஒரு மாதிரியான தன்மையிலிருந்து கொண்டிருந்தீர்கள். ஒரு சிலருக்கு இது ஹெல்த் பிரச்சனைகளையும் கொடுத்திருக்கும்.
சில தொந்தரவுகளை அனுபவித்து கொண்டிருக்கக்கூடிய தனுசு ராசிக்கு இப்போது இந்த வைகாசி மாதத்திலிருந்து தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் ஜெயமாகக்கூடிய தன்மை என்று சிறப்பு பெறும். ராசி அதிபதியை, அதாவது குரு என்று சொல்லக்கூடிய ஒரு நல்லவர், உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். அப்போது ராசியைப் பார்த்து வலுப்படுத்தும்போது, உங்கள் எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் வலுபெறும் என்று அர்த்தம். இனி உங்களுக்கு நல்ல நேரம் இருக்கப் போகிறது.
மன உற்சாகம் மற்றும் புதிய எண்ணங்கள்
உங்கள் மனது நல்ல நிலையில் இருக்கப் போகிறது. செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். புதிய புதிய எண்ணங்கள், ஸ்ட்ராட்டஜி, பிளான் வகுக்கக்கூடிய தன்மை உங்களுக்கு உருவாகும். ஏனெனில், புதன் ஒரு நல்ல இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்ற தன்மை உங்களுக்கு கிடைக்கும். இதுவரை பேசியே ஏதாவது ஒரு வம்பு, விளக்கு வாங்கிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது உங்களுடைய ஸ்ட்ராட்டஜி, பிளான், வித்தியாசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் மாறுவீர்கள்.
எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்ற ஞானம் உங்களுக்கு புலப்படக்கூடிய ஒரு மாதத்தின் தொடக்கமாக இந்த வைகாசி மாதம் சிறப்பு பெறும். இந்த தனுசு rasi அன்பர்களுக்கு குடும்பம் சார்ந்த விஷயங்களில் பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருந்தன. குடும்பம் நன்றாக இல்லை, ஒரு சிலருக்கு குடும்பம் அமையவில்லை என்று சொல்லக்கூடிய இந்த மாதிரி பல பிரச்சனைகளோடு இருக்கக்கூடிய தனுசு ராசிக்கு இந்த மாதம் விடிவுகாலமாகப் பிறக்கும்.
குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம்
கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம்
இந்த மாதம் கணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் விதைக்கும். இதுவரை புரிந்து கொள்ளாமல், சின்னச் சின்ன மனச் சங்கடங்கள், கஷ்டங்களோடு இருக்கக்கூடிய தனுசு ராசி தம்பதிகள், இப்போது அன்யோன்யத்தை வெளிப்படுத்துவார்கள். புரிந்து கொள்ளக்கூடிய தன்மைகள், சந்தர்ப்பங்களை உருவாக்கும். அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக்கூடிய சில சந்தர்ப்பங்களை இந்த மாதம் உருவாக்கும்.
ஏற்கனவே பிரிந்தவர்கள் கூட இப்போது ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகளை இந்த தனுசு ராசிக்கு நிச்சயமாக உருவாக்கும். அப்போது குடும்பம் நன்றாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடிய அமைப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. உங்களுடைய வாக்கு பலிதமாகும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், நீங்கள் பேசிய பேச்சுக்கு எதிர் வினை ஆற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாமே, இப்போது "இவர் சொன்னது சரிதான்" என்று கேட்கக்கூடிய அளவுக்கு இந்த மாதத்தின் தன்மை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுவேன்.
முயற்சி மற்றும் வெற்றி
மூன்றாம் இடத்தின் பலம்
மூன்றாம் இடம் என்று சொல்லப்படுவது முயற்சி ஸ்தானம், தைரிய வீரியத்தைக் கொடுக்கக்கூடிய இடம். ஒருவருக்கு மூன்றாம் இடம் நல்லபடி இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு உற்சாகமாகச் செயல்படக்கூடிய தன்மை இருக்கும். இந்த மூன்றாம் இடத்தின் அதிபதி நான்காம் இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார். சுக ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்கிறார். அந்த சுக ஸ்தானத்தின் அதிபதியான குருபகவான் மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார். அப்போது, நீங்கள் நல்லபடியாக இருக்கப் போகிறீர்கள்.
ஒரு புகழ், கீர்த்தி கிடைக்கப் போகிறது. யாரெல்லாம் உங்கள் புகழைக் கிடைக்காமல் தடைப்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அது எல்லாம் அப்படியே விலகப் போகிறது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதற்கு இந்த வைகாசி மாதம் ஒரு சிறந்த மாதமாக இருக்கும் என்று சொல்லுவேன். மூன்றாம் இடம் புனிதப்படுத்தப்படும்போது, புகழையும், கீர்த்தியையும், வெற்றியையும் கொடுக்கும். சாதிக்கக்கூடிய தன்மை இருக்கிறது.
மன உற்சாகம் மற்றும் ராகுவின் தாக்கம்
மனதில் உற்சாகம் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு உற்சாகம் வேண்டும் அல்லவா, ஒரு தன்னம்பிக்கை வேண்டும் இல்லையா? அந்த தன்னம்பிக்கை கிடைக்கக்கூடிய மாதமாக இந்த தனுசு ராசிக்கு இந்த வைகாசி மாதம் இருக்கும் என்று சொல்லுவேன். உபஜய ஸ்தானத்தில் ராகு உட்கார்ந்திருக்கிறார். ராகு என்ற கிரகம் இந்த மாதிரி உபஜய ஸ்தானத்தில் இருக்கும்போது, அதீத வளர்ச்சியைக் கொடுக்கும். ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கக்கூடிய தன்மை இருக்கிறது.
ராகு என்று சொல்லப்படுவது பாம்பு அல்லவா, ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி மூன்றாம் இடத்தில் இருக்கும்போது, சிறு தூரப் பயணங்களை உங்களுக்கு ஏற்படுத்தும். அந்தப் பயணங்களின் மூலமாக அனுகூலங்கள், ஆதாயங்கள் உண்டு. விற்பனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நற்பலன்களைத் தரும். வியாபாரம் நல்லபடியாக இருக்கும்.
வியாபாரம் மற்றும் ஒப்பந்தங்கள்
எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்ற வியாபார நுணுக்கங்கள் இந்த மாதத்தில் தனுசு ராசிக்கு சிறப்பு பெறும் என்று சொல்லுவேன். புதிய புதிய ஒப்பந்தங்கள் கை கொடுக்கும். ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த தனுசு ராசிக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கும். ரொம்ப நாளாக எதிர்பார்த்து, "இங்கே போக வேண்டும், இந்த ஒப்பந்தம் போட வேண்டும், இது கிடைத்தால் நமக்கு நல்லது" என்று நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் நல்லவையாக முடியக்கூடிய தன்மை என்று சிறப்பு பெறும்.
உடல்நலம்
நான்காம் இடத்தில் சனி உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரனோடு இணைகிறார். சுக்கிரன் ஓகே, ஆனால் சனி அங்கு இருப்பதால், நிறைய பேருக்கு கால் வலி, கை வலி இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படலாம். சுக்கிரன் என்று சொல்லப்படுவது தனுசு ராசிக்கு வந்து, சர்க்கரை இருக்கிறவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். சரியான உடற்பயிற்சி, சரியான உணவு கட்டுப்பாடு இந்த தனுசு ராசிக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடு மற்றும் சொத்து
அதே சமயத்தில், சுக்கிரன் வலுவாக உட்கார்ந்திருக்கிறார். உச்ச பலத்தோடு இருக்கிறார். சுக்கிரன் உச்சமாக இருக்கும்போது, அது நான்காம் இடத்தில் உட்காரும்போது, சுக ஸ்தானத்தில் உட்காரும்போது, வீட்டு ஸ்தானத்தில் உட்காரும்போது, வீடு அமைத்துக் கொடுக்கும். நிறைய தனுசு ராசிக்கு வீடு வாங்க வேண்டும், வீட்டுக்கான அத்தனை அமைப்புகளையும் தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு, இந்த மாதம் அதை நிறைவேற்றிக் கொடுக்கும். புதிய வீடு வாங்க வைக்கும்.
வீட்டை ஆல்டர் பண்ணி, அதாவது உங்கள் வீட்டை அப்படியே மாற்றும். அவ்வளவுதான். ஆல்டர் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த எண்ணத்தைக் கொடுத்து, ஆல்டர் பண்ணுவதற்கான அமைப்புகளை உருவாக்கும். நிறைய தனுசு ராசிக்கு கிரக பிரவேசம் நடக்கக்கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்களை உருவாக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த வைகாசி மாதம் அமையும். சனி அங்கு இருப்பதால், சுக ஸ்தானத்தில் தாய்க்கு சின்னச் சின்ன தொந்தரவு கொடுக்கலாம். ஒரு தாயின் உடல்நல விஷயத்தில் மட்டும் தனுசு ராசி கொஞ்சம் பார்த்துக் கொள்வது நல்லது என்பதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் நலன்
ஐந்தாம் இடத்துக்கு உரியவன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார். அப்போது, குழந்தைகளின் நலனில் ஏதாவது ஒரு தொந்தரவு, பிரச்சனை வந்துவிடுமா என்ற எண்ணம் ஒரு சிலருக்கு இருக்கும். ஐந்தாம் இடத்தின் அதிபதி நீச்சமாக இருப்பதால், "என் பேச்சைக் கேட்கமாட்டேன் என்று சொல்கிறான், முடிவெடுப்பதில் சரியாக இல்லை, படிப்பில் இதைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறான், ஆனால் வேறு ஒன்று நினைக்கிறான்" என்று குழறுபடிகளாக இருக்கக்கூடிய தனுசு ராசிக்கு, இந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஐந்தாம் இடத்துக்கு உரியவன் ஒன்பதாம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கல்வியில் தெளிவு
எப்போது வருகின்ற வைகாசி மாதம் 23-05-2025, தெளிவு பெறும். நீச்சமாகக் கடந்த சில மாதங்களாக இருந்த செவ்வாய், இப்போது ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு வந்து அமரும்போது, இந்தப் படிப்பு சம்பந்தப்பட்ட அத்தனை குழறுபடிகளும் நிவர்த்தியாகும். "இதைத்தான் படிக்கப் போகிறேன், இதைத்தான் பண்ணப் போகிறேன்" என்ற தெளிவான சிந்தனை என்று தனுசு ராசிக்கு நிச்சயமாக அமையும். குழந்தைகளின் நலன் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏனெனில், ஐந்தாம் இடத்துக்கு உரியவன் ஒன்பதாம் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது, குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய தன்மை இந்த வைகாசி மாதத்தின் இறுதியில் இந்த தனுசு ராசி எதிர்பார்க்கலாம்.

Post a Comment
0Comments