தனுசு ராசிக்கு 2025 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
தனுசு ராசி நேயர்களுக்கு என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடக்கும்? தனுசு ராசிக்கு பொறுத்தவரைக்கும் இது ரொம்பவே Positive ஆக இருக்கும்.
![]() |
தனுசு ராசிக்கு 2025 ராகு கேது பெயர்ச்சி |
அர்த்தாஷ்டம சனி
ராகு, கேது பெயர்ச்சி காலத்தில் ஏற்கனவே அர்த்தாஷ்டம சனியில் இருக்கிறார்கள். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் குருவுடைய வீடில் தான் சனி இருக்கிறார். ராகு சனியின் வீடில் இருந்தாலும்கூட, குருவின் பார்வை ராகுவிற்கு இருக்கிறது.
குருவின் ஏழாம் பார்வையின் பாதுகாப்பு
ராகு, கேது, சனி பாதிப்புகளுக்கு கவலை இல்லை. இன்னும் ஒரு பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், "நானே உன்னைப் பார்க்கிறேன், நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" மாதிரி குரு வந்து ஏழாம் பார்வையில் தனுசு ராசியை பார்த்துக் கொண்டு இருக்கிறார். உங்களுக்கு குரு ஒரு பாதுகாப்பு அரணாக அமர்ந்துள்ளார்.ராகு, கேது, சனி ஆகியோர் தனுசு ராசியினரை எதுவும் செய்ய முடியாதபடி, வாசலில் காவலனாக குரு அமர்ந்திருக்கிறார். இதனால் பெரிய அளவில் எந்தக் கஷ்டங்களும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும்.
ராகு மூன்றாம் இடத்தில் – வெற்றியின் பெரும் வாய்ப்பு
தற்போது ராகு மூன்றாம் இடமான உபசய ஸ்தானத்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் ஒரு பாவ கிரகம் இருந்தால், வெற்றியை எளிதாகக் கிடைக்கச் செய்யும் என்பது மாற்றமில்லாத உண்மை.
ராகு ரொம்ப வலிமையான கிரகம். மற்ற எல்லா கிரகங்களைவிட வலிமை மிகுந்தவர். ராகு ஒரு பிரம்மாண்டமான பேராசையை குறிக்கக்கூடிய கிரகம்.
ராகு மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வெற்றி ஐந்து மடங்கு அதிகமாக கிடைக்கும்.
இனி உங்கள் வாழ்வில் நிறைய பேர் பார்த்து ஆச்சரியப்படுவார்கள் –
"என்னடா, நேத்து இப்படி இருந்தாங்க, இன்னைக்கு வேற லெவல் ஆயிட்டாங்க; இனிமே எங்களை எல்லாம் கண்டுக்கவியா?" என்று கலாய்க்கிற அளவுக்கு ராகு உங்களுக்கு நிறைய நல்ல மாற்றங்களை கொடுப்பார்.
கேது ஒன்பதாம் இடத்தில்
கேது தற்போது ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.நிறைய தனுசு ராசிக்காரர்கள், கடவுளை கூட நம்பாதவர்களாக இருந்தாலும், இப்பொழுது ஆன்மீகப் பாதையில் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சித்தர்கள் வழிபாட்டில், நிறைய தனுசு ராசி நேயர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு செல்ல ஆரம்பிப்பார்கள்.
ஜீவ சமாதிகளை தேடி தேடி போய், தியானம் செய்வார்கள். விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்ட மெய் ஞானத்தைக் காணவும், ஆராய்ச்சி செய்யவும் முயற்சி செய்வார்கள். கண்ணுக்கு புலப்படாத விஷயங்களைப் பற்றி நிறைய யோசித்து, தங்களுடைய ஞானத்தை வளர்த்துக் கொள்ள இந்த வருடம் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமையும்.
ஆறாம் அதிபதி சுக்கரன் தொழில் –
நீங்கள் புதிய தொழில் தொடங்கலாம். ஏற்கனவே இருக்கின்ற தொழில் விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். கூட்டுத் தொழில் இப்போதைக்கு வேண்டாம். என்ன இருந்தாலும் 4ஆம் இடத்தில் சனி இருப்பதால், தப்பான வழிநடத்தல் அப்படிங்கறது வரும்.
ராகுவும் 3ஆம் இடத்தில் இருக்கறதுனால என்ன நடக்கும் என்றால்: “சீக்கிரம் வெற்றி பெற வேண்டும்! சீக்கிரம் பணம் பண்ணனும்!” அப்படிங்கற ஒரு ஆசையை கொடுத்துட்டே இருப்பாரு.
ராகு எப்பவுமே ஒரு ஆசையை தூண்டிவிட்டு இருப்பாரு.
எந்த இடத்துல இருக்கிறாரோ, அந்த இடம் சம்பந்தப்பட்ட ஒரு ஆசையை ராகு தூண்டுவிட்டு இருப்பாரு.
3ஆம் இடம் அப்படி என்றால் என்னது? குறுக்கு வழியில் போய் ஜெயிக்கறது. சனியும் நான்காம் இடத்தில் இருப்பதால், தப்பான முதலீட்டுக்குள் நீங்க போறதுக்கான வாய்ப்பு இருக்கு.
மாணவர்கள் ராகு கேது பெயர்ச்சி ஏற்படக்கூடிய நன்மைகள்;
தனுசு ராசியை பொறுத்தவரைக்கும், படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த வருடம் ரொம்ப நல்ல இருக்கிறது என்றேதான் சொல்ல வேண்டும்
மாணவர்களுக்கு மூளை கொஞ்சம் கற்பூர புத்தியா வேலை செய்யும். படிப்பில் கவனம் செலுத்த முடியும். கவனமா படிச்சாங்கன்னா, அரசு வேலைக்கு போக வாய்ப்பு இருக்கு.
உடல் நலம்
தனுசு ராசிக்கு ஆறாம் அதிபதி சுக்கரனா இருக்கறதுனால, அடிக்கடி நோய் தொற்று ஏற்படும். குறிப்பாக UTI (Urinary Tract Infection), ஹார்மோன் பிரச்சனை பெண்களுக்கு வரதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆண்களுக்கும் தைராய்டு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு.
பொதுவான ஆலோசனை:
இந்த ராகு கேது பெயர்ச்சி – தகுதியான நபருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி மட்டும்தான் நல்லது அப்படிங்கறது கொஞ்சம் புரிய ஆரம்பிக்கும்.
“உனக்கு இது தேவையா? நீ பேசாம இருந்திருக்கலாம். இப்ப உனக்கு என்ன கிடைச்சதுன்னு?” இவங்களே இவங்களை பார்த்து கண்ணாடியில கேட்டுட்டு இருந்திருப்பாங்க.
இப்போது இந்த ராகு கேது பெயர்ச்சி அந்த புரிதலை உள்வாங்கிக்கிட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டும் உதவி செய்வாங்க. தனுசு ராசி பொருத்த மட்டுலும் உதவி செய்வதைய யாராலும் தடுக்க முடியாது. அதனால் தகுதியான நபர்களுக்கு குறைந்தபட்சம் உதவி செய்து, அதன் மூலமா சந்தோஷப்படுவீர்கள்.
சொந்த பந்தம் பாதிக்காது, பகையாகாது, சொத்து பத்து இழப்பு ஏற்படாது,
தாயார் கூட பகை ஏற்படாது, வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது.
இனிமேல்தான் நீங்க விடுதலையாக போறீங்கன்னு சொல்லலாம்.
வாழ்க்கையில் நீங்க எங்க மாட்டி இருந்தீங்களோ, அங்கிருந்து விடுதலை ஆயிடுவீங்க. இனிமேல் "தனி காட்டு ராஜா"ன்னு சொல்றோம்ல. அந்த மாதிரி வந்துருவீங்க. வேலை, பொருளாதாரம் நன்றாக இருக்கும், வருமானமும் , செல்வமும் நன்றாக இருக்கும்.
இனிமேல் உங்களுடைய கஷ்டம் பூரா காணாம போற நேரங்க இது. இந்த ராகு பெயர்ச்சியானாலே போதும். எவ்வளவு கஷ்டம் இருந்துச்சுனாலும் சரி,
அப்படி டக்கு டக்கு டக்கு டக்குன்னு இருந்த இடம் தெரியாம ஓடிக்கிட்டே இருக்கும்.
ராகு இனிமேல் உங்களை காப்பாத்தும்.மூன்றாவது ராசியில் இருக்கிறதுனால, மூன்றாவது ராசிக்கு போறதுனால சகோதர விஷயத்தில மட்டும் தொந்தரவு தரும்.
சகோதர விஷயம்ன்னா, கூட பிறந்த அண்ணன், தம்பி இருந்தா, அவங்களோட கொஞ்சம் பகையை ஏற்படுத்தும். அது ஒரு வேலை செய்யும். மத்தபடி, எடுத்த காரியத்தில எல்லாம் வெற்றிகளை தரும் இனிமேல். அதனால், ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைத்தான் இனிமேல் கொடுக்கப்போகுது.
Post a Comment
0Comments