Dhanusu May Month Rasi Palan 2025 மே மாதம் தனுசு ராசி பலன்கள்

Admin
By -
0

தனுசு ராசி: மே 2025 பலன்கள்

தன்னுடைய தைரியத்தால் மட்டுமே முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே! எப்படி இருக்கப் போகுது இந்த 2025-வது வருட மே மாதம்?
அடுத்த கட்ட நகர்வை நோக்கி இருக்கப் போகிறது, மே 15-ம் தேதிக்கு அப்புறம் அருமையோ அருமை. மே 15-க்கு முன்னாடி நல்லா இல்லையா? அதைவிட அருமையாக இருக்கும்!

2025 மே மாதம் தனுசு ராசி பலன்கள்
2025 மே மாதம் தனுசு ராசி பலன்கள்

கிரகங்களின் இயக்கம்

பரிவர்த்தனை மற்றும் உச்சம்

11-ம் அதிபதியும் ராசி நாதனும் பரிவர்த்தனை! சுக்கிரன் குரு வீட்லயும், குரு சுக்கிரன் வீட்லயும் அப்படியே பெயர்ச்சி ஆகிறார்கள். மேலும் உங்கள் ராசிக்கு சுக்கிரன் உச்சமாகி இருக்கிறார். ராசி நாதன் குரு மே 15-ம் தேதிக்கு பிறகு உங்கள் ராசியை தான் பார்ப்பார்.
ஏழாம் பார்வையாக உங்களைப் பார்த்து, உங்களை பலம் பெற வைக்கப் போகிறார். பலம் இழந்து கொண்டிருந்த அத்தனை தனுசு ராசிக்காரர்களுக்கும், "அப்படி போடு" மாதிரி இருக்கப் போகிறது இந்த மே மாதம்.

திரிகோண இயக்கம்

மேஷத்துக்கு ஐந்தாம் அதிபதி உச்சமாக இருக்கிறார்! பொதுவாக ஒன்று, ஐந்து, ஒன்பது திரிகோணங்கள் என்றால், ஒன்பதாம் அதிபதி ஐந்துல உச்சம். சிறப்பு என்றே சொல்லலாம்! சாதாரணமாக மேஷம், சிம்மம், தனுசு, ஒன்று முதல் ஒன்பது வரை முக்கோணங்களில் இருக்கும். இவற்றின் இயக்கமே வித்தியாசமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு! இந்த முறை மேஷத்தில் உச்சம் அடைஞ்சிருக்கக்கூடிய உங்களுடைய ஒன்பதாம் வீட்டு அதிபதி, உங்களை அருமையாக இயக்கப் போகிறார்கள்.

சூரியனின் பங்கு

கால புருஷனுடைய ஐந்தாம் அதிபதி, உங்களுடைய ஒன்பதாம் அதிபதி, சூரியன் உச்சமா இருக்கும்போது, வேற என்ன வேண்டும்? தனுசு ராசிக்காரங்களுக்கு தலைமைத்துவம், காசு, பணம் எல்லாம் படிப்படியாக கிடைக்கப்போகிறது.

தன்னம்பிக்கையும் முன்னேற்றமும்

யாரெல்லாம் உங்களை அசிங்கப்படுத்தினர்களோ, அவங்க முன்னாடி எழுந்து நிற்பீர்கள் அந்தத் தோரணை, அந்தத் துணிவு, அந்தத் துணிச்சல், இத்தனை நாள் வராத பயங்கரமான ஒரு தன்னம்பிக்கை, உங்களுக்கு உண்டாகும். அடுத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல "நான் இருக்கேன்" உங்களுக்குள்ளே தோன்றும்.
 

பிரபலம்

இந்த மே மாதத்தில் உங்களுக்கு பிரபலம் யோகம் கிடைக்கப் போகிறது. இதுவரை நீங்கள் யாரென்றே தெரியாதவர்களாக இருந்திருக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் கூட உங்களைப் பற்றி பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனி எல்லோருக்கும் தெரியப் போகிறது.

மே 15-க்குப் பிறகு குருவின் பார்வை

மே 15-ம் தேதிக்கு பிறகு, உங்கள் ராசி நாதன் குரு மூன்றில் அமர்ந்து, அதாவது கால புருஷனுடைய மூன்றில் அமர்ந்து, உங்களைப் பார்க்கப் போறார். இதன் இதன் விளைவு உங்களுக்கு அருமையான வாய்ப்புகளை அள்ளித் தருவார்கள்! தான், வீட்டைத் தானே பார்க்கும் கிரகங்கள் ரொம்ப அழகானவை. அழகா இயக்கும் வாழ்க்கையில், இந்த மாதிரி தனுசு ராசிக்காரர்களுக்கு, குரு சென்று மூன்றில் அமர்ந்து கால புருஷனுடைய மூன்றாம் இடம் சொல்லக்கூடிய முதன்மை வீட்ல உங்களைப் பார்க்கும்போது, செல்வங்களை வாரி வழங்குவார்கள்.

ஆத்ம ஞானமும் பயணங்களும்

ஆத்ம ஞானம் அதிகரிக்கும்போது, அறிவு மேலோங்கப் போகிறது. மோசமான இடத்திலிருந்து விடுதலையாக போகிறீர்கள். , மே மாதம் 15-ம் தேதிக்கு அப்புறம், அதிக பயணங்கள் செய்யப் போகிறீர்கள் மூன்றாம் இடம் என்றால் சிறு தூரப் பயணங்களை குறிக்கும்.

மூன்றாம் இடத்தில், தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு நேரடியாக பார்வையில் பதிக்கிறார். பத்தாவது குருவோட நேரடி பார்வை வேற! உங்களைப் பார்க்கறாரு. இதனால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும். காதல் மலரும்.

11-ம் இடத்தின் ஆதரவு

உங்களுடைய மூன்றாம் இடத்தை ராசி நாதன் குரு பார்க்கிறார். 11-ம் அதிபதி உச்சமா இருக்காரு. தனுசு ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று சொல்ல வேண்டும்.

சுப செலவுகள்

உறவினர்களுக்கான செலவுகள்

தங்கைகளுக்கு செலவு செய்தல். சகோதரத்தைக் குறிக்கக்கூடிய இடம் செவ்வாய், புதன். அதனால், தங்கச்சிக்கு செலவு செய்வது, இளைய சகோதரத்துக்கு செலவு செய்வது, அவங்களுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுப்பது, சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது அன்பளிப்பு செய்வது நகை ஆபரணங்கள் வாங்குவது என தனுசு ராசிக்காரர்களுக்கு சுபச் செலவு இந்த மாதம் ஏற்படும்.

சொந்த பந்தங்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாள் பிறக்கப் பிறகு, உங்கள் சகோதரி வீட்டுகளில் விருந்துக்குசெல்வது நீண்ட நாளுக்கு பிறகு, உங்கள் அத்தை வீட்டில் சாப்பிடுறது, இதெல்லாமே அதன் மூலமாக ஒரு லாபம், அதன் மூலமாக ஒரு சந்தோஷம், அதன் மூலமாக ஒரு நிம்மதி எல்லாமே கிடைக்கப் போகுது.

கவனமாக இருக்க வேண்டியவை

காரிய வெற்றி கிடைக்கப் போயிருது. தொழில் மட்டும் கொஞ்சம் கவனமா இருங்க வேண்டும். இதுவரைக்கும் Work From Home , "ஆனால் ஆனால் இப்போது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஒரு சிலர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு "வீட்ல இருந்து வேலை செய்யுங்களே" என்று சொல்லப் போறாங்க. Cover Duty, Overtime பார்க்கறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் இருக்கும். எனவே கொஞ்சம் கவனமா இருக்கணும். இது எல்லாம் மே 11 முதல் மே 15 வரை. 

பண லாபம்

தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரைக்கும், இந்தத் தடவை நிறைய சந்தோஷங்கள் குவியப் போகிறது. நிறைய சொந்த பந்தங்களுடைய ஒரு ஆதரவு கிடைக்கப் போகிறது. 11-ம் அதிபதியாக இருப்பதால், லாபங்கள் அதிகரிக்கக் கூடிய காலகட்டமா இருக்கும். அதுவும் பண லாபம், சுக்கிரன் என்றால் காசுதான். அதனால், பண லாபம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கும்.

நிறைய அன்பளிப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். நிறைய வெள்ளி சேர்வதற்கான வாய்ப்பு இருக்கும். நிறைய தங்கம் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கும். வெள்ளியில திடீர்னு ஒரு காப்பு கையில போட்டுக்கொள்வது. நிறைய வெள்ளி பொருள்கள் வாங்குவது, உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது பேக் வாங்குறது, குழந்தைகளுக்கு ஏதாவது ஆடை ஆபரணங்கள் வாங்குறது, இதெல்லாம் நடக்கப் போகுது.

மாணவர்களுக்கு

படிக்கும் பிள்ளைகளாக இருந்தால், மிகப்பெரிய அளவில் தேர்ச்சி பெற்று, நிறைய மதிப்பெண்கள் பெறுவீர்கள். எல்லோரும் உங்களைக் கொண்டாடக்கூடிய நிலை ஏற்படும். உங்கள் பெற்றோர்கள் உங்களை நினைத்து பூரித்துப் போவார்கள், சந்தோஷப்படுவார்கள். அப்படிப்பட்ட நிலை இந்த மாதத்தில் உருவாகப் போகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களாக இருப்பவர்கள், நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில்—அது ஒரு பெரிய காம்ப்ளக்ஸாக இருக்கலாம், ஐடி கம்பெனியாக இருக்கலாம், ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கும் இடமாக இருக்கலாம்—நீங்கள் தனித்து தெரியக்கூடிய அளவுக்கு ஒரு சாகசம் செய்வீர்கள். ஒரு அற்புதத்தைச் செய்வீர்கள், ஒரு புதுமையைச் செய்வீர்கள். அது உங்களுக்கு இந்த பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தொழிலதிபர்களுக்கு

உங்கள் தொழிலில் புதிதாக ஒரு ஐடியா உங்களுக்கு வரும். அதை நடைபெற படுத்துவீர்கள். அது நிறைய பேருக்கு பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். உங்கள் தொழில் அந்த அளவுக்கு நல்ல முன்னேற்றம் காணும்.

தனித்திறமை உள்ளவர்களுக்கு

தனித்திறமை உள்ளவர்கள்—ஒரு கவிஞராக இருக்கலாம், கதாசிரியராக இருக்கலாம், பாடலாசிரியராக, டான்ஸ் மாஸ்டராக, திரைப்பட இயக்குநராக இருக்கலாம்—எந்தத் துறையில் தனித்திறமை இருந்தாலும், அதில் உங்களுக்கு பலன் கிடைக்கக்கூடிய அம்சம் இருக்கிறது. உதாரணமாக, ஒரு திரைப்பட இயக்குநர் நல்ல படம் கொடுத்திருப்பார், ஆனால் அதற்குப் பிறகு படம் எடுக்க வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கூட, இந்த மாதத்தில் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

விளையாட்டு மற்றும் அரசியல் துறையில்

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் ஒரு சாதனையைச் செய்வீர்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு, மிகப்பெரிய பிரபல்ய யோகம் இந்த மாதத்தில் கிடைக்கப் போகிறது. பொதுத்துறையில், அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த மே மாதத்தில் பிரபல்ய யோகம் உருவாகப் போகிறது.

மாதத்தின் பிற்பகுதியில், மே 14-ம் தேதிக்கு மேல், குருபகவான் ஏழாம் இடத்திற்கு வந்து, நேரடியாக ராசியைப் பார்க்கப் போகிறார். அதனால், நீங்கள் போற்றப்படப் போகிறீர்கள், கொண்டாடப்படப் போகிறீர்கள், சாதிக்கப் போகிறீர்கள். எனவே, இந்த மாதத்தை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் தொடங்கலாம். இந்த மாதத்தை வீணாக்க வேண்டாம், விரயமாக்க வேண்டாம். பயன்படுத்திக் கொண்டால், இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மூல நட்சத்திரம்

மூல நட்சத்திர அன்பர்களுக்கு இந்த மாதத்தில் விசேஷ பலன் என்னவென்று பார்க்கும்போது, இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது. இவர் பத்தாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு செல்கிறார். இதுவரை நீங்கள் உங்கள் வேலையில் தெரிந்து கொள்ளாத விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் நிறைய அனுபவம் உள்ளவராக இருக்கலாம். 

உங்கள் துறையில் பல வருட அனுபவம் இருக்கலாம். ஆனால், தெரியாத, புரியாத விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். புதுமையான விஷயங்கள், ஆராய்ச்சிக்கு உட்பட்ட விஷயங்கள் தானாக உள்ளுணர்வாகத் தோன்றுவது அல்லது ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வது இந்தப் பலன் மூல நட்சத்திர அன்பர்களுக்கு உள்ளது.

பூராட நட்சத்திரம்

பூராட நட்சத்திரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு உங்களுக்கான வீடு எப்படி இருக்க வேண்டும், எப்படி வாங்கலாம், எப்படிப்பட்ட ஆபரணம் அணியலாம் அல்லது குடும்ப நபர்களுக்கு ஆபரணம் வாங்கித் தரலாம் இவற்றை முடிவு செய்யலாம்.

பூராட நட்சத்திரம் உள்ள தனுர் ராசி அன்பர்களுக்கு, மே மாதத்தில் வீடு வாங்குவது ஒரு கனவு வீடாக இருக்கிறது. பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் இது ஒரு இலக்காக இருந்திருக்கலாம். ஒரு பேப்பர் எடுத்து, உங்கள் வீட்டை வரைந்து வைத்திருங்கள். ஒரு பிளான் போட்டு வைத்திருங்கள். "நான் வீடு கட்டினால் இப்படித்தான் கட்டுவேன்" என்று எதிர்காலத்தில் பாருங்கள், அதை நீங்கள் கட்டியிருப்பீர்கள். இந்தப் பலன் இந்த மாதத்தில் இருக்கிறது.

உத்திராஷாடா நட்சத்திரம்

உத்திராஷாடா நட்சத்திரம் (முதல் பாதம்) உள்ளவர்களுக்கு இந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய பலன் என்னவென்று பார்க்கும்போது, ஒரு மறந்து போன விஷயம் ஞாபகத்திற்கு வரும். தொலைந்து போன பொருள் ஒன்று கிடைக்கும். அல்லது, அடகு வைத்த பொருட்களை மீட்க முடியும். அடகு வைத்த நகையை மீட்க முடியும். இந்தப் பலன் உத்திராஷாடா நட்சத்திரத்திற்கு உள்ளது.

தவிர்க்க வேண்டியவை

தண்டனை மற்றும் அதிகாரம்

இந்த மாதத்தில் நீங்கள் பிரபல்யம் பெறுவீர்கள், பிறருடன் சேர்ந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள் என்று பார்த்தோம். ஆனால், கவனமாக இருந்து தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கும்போது, தண்டனை, கண்டிப்பு, அதிகாரம் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
பிறர் தவறு செய்தாலும்,குடும்ப நபர்களாக இருந்தாலும்,எடுத்துச் சொல்ல வேண்டும், மன்னிக்க வேண்டும். "தவறே கிடையாது" என்று விட்டுவிடலாம். "தண்டித்தால் தான் திருந்துவார்கள்" என்று செய்ய வேண்டாம். குழந்தைகள், இளைய சகோதரர்கள், வாழ்க்கைத் துணை, நண்பர்களைத் தண்டிக்க வேண்டாம். மன்னித்து விடுங்கள். இந்த மாதத்தில் இதைச் செய்யலாம்.

அதிகார தோரணை

பொதுவாக, நீங்கள் அதிகாரம் செய்ய மாட்டீர்கள். ஆனால், இப்போது செவ்வாய் அஷ்டமத்தில் இருக்கிறார். அதனால், அதிகார தோரணை உங்களுக்கு வந்தால், அதைச் செய்யக் கூடாது. இவை தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

தர்ம காரியங்கள்

இந்த மாதத்தில், நீங்கள் அனுதினமும் ஏதாவது ஒரு தர்ம காரியத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் செடி, கொடி, மரம் இருக்கிறதா? காலையில் தண்ணீர் விடுங்கள். இல்லையென்றால், இது கடுமையான கோடை காலம், அக்னி நட்சத்திர காலம். உங்கள் வீட்டு பால்கனியில், மொட்டை மாடியில், பறவைகள் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள்.

பசு, மாடு, நாய் போன்றவற்றுக்கு உணவளியுங்கள் . அல்லது, கஷ்டப்படும் மனிதர்களுக்கு உணவோ, ஏதாவது ஒரு பொருளோ கொடுங்கள். அனுதினமும் பிறருக்கு உணவு கொடுப்பது பெரிய விஷயமாக இருக்கலாம். ஒரு செடிக்கு தண்ணீர் விடலாம், ஒரு பறவைக்கு தண்ணீர் வைக்கலாம். உங்கள் சக்திக்கு ஏற்றவாறு, அனுதினமும் ஒரு நபருக்கோ, ஒரு ஜீவராசிக்கோ ஏதாவது ஒரு தர்மத்தை, உதவியைச் செய்யுங்கள். இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

Read more click here  

Post a Comment

0Comments

Post a Comment (0)