தர்ம எண்ணங்கள் கொண்ட தனுசு ராசி நேயர்களுக்கு பொற்காலம்!
![]() |
தனுசு குரு பெயர்ச்சி 2025 Dhanusu rasi Guru Peyarchi Palan |
குருவின் பார்வை - வெற்றியின் வழி
குரு பெயர்ச்சியின் பலம்
தனுசு ராசி நேயர்களுக்கு 2025 அடி தூள்! என்று சொல்ல வேண்டும். தனுசு ராசிக்கு 6 இல் இருந்த குரு இப்போது 7 இல் குரு வருகிறார். உங்களின் அதிபதி குரு தான் அவர் 7 இல் உங்களைத் தான் பார்க்கப் போகிறார், இதனால் அர்த்தாஷ்டமா சனியை பற்றிக் கவலை படத் தேவையில்லை. குரு எப்போதுமே தான் வீட்டைத் தானே பார்க்கும் கிரகங்களுக்கு வலிமை அதிகம் என்று சொல்ல வேண்டும்.எப்போதும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வழியைப் பாருங்கள். தனுசு ராசிக்கு குரு பார்ப்பதால் எல்லா விதத்திலும் ஏற்றமாக இருக்கும்.சமூகத்தில் பெயர், கௌரவம் மற்றும் அந்தஸ்து கிடைக்கும். இந்தக் குரு பெயர்ச்சி பிரமாண்ட வெற்றி, பிரம்மாண்ட திட்டமிடல் பிரம்மாண்ட அனுகூலம் இவை அனைத்தும் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.
பயணங்களும் உறவுகளும்
மகிழ்ச்சியும் பயணங்களும்: இந்த 2025 வருடம் நிறைய பயணங்கள் போய் வருவீர்கள்.பயணங்கள் விஷயத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்தில், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்
ஆரோக்கியத்தில் கவனம்
உடல்நல பராமரிப்பு: இந்த வருடத்தில் உங்களுக்குக் காலிலோ அல்லது வயிறு பிரச்சனைகள் ஏற்படும். ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் இருந்தால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளிடம் வாக்கு வாதம் வேண்டாம். அப்பா அம்மாக்கு இதுவரை ஏதேனும் மருத்துவம் செலவுகள் செய்து கொண்டிருந்தால் இனி வருங்காலங்களில் பெற்றோர்களின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் சிறப்பாக அமையும். மனதளவில் புத்துணர்ச்சி தரும்.
செல்வமும் மகிழ்ச்சியும்
லாபமும் ஆபரணங்களும்: இந்த 2025 வருடம் இலாபம் அதிகம் ஏற்படும். இளம் பெண்களுக்கு வைர நகைகளும் ஆடை ஆபரணங்கள் பொருட்கள் சேரும். தைரியம் ஏற்படும். இந்தக் குரு பெயர்ச்சி அபரிவிதமான வெற்றி மற்றும் செல்வத்தைக் கொடுக்கும்.சிலருக்கு வண்டி, கனரக வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை
கணவன்-மனைவி உறவு :தனுசு ராசி கணவன்மார்கள் மனைவியிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது.7 ல் குரு குடும்ப உறவுகளிடம் இருந்த பகைகள் விலகும்குடும்பத்தின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.திருமண பந்தத்தில் இணைய விரும்புவோருக்கு இந்த ஆண்டு சிறப்பானது. நல்ல புத்திர பாக்கியத்துடன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ஏழாம் இடத்தில் குரு இருப்பதால் காதல் திருமணங்கள் இந்த வருடத்தில் கைகூட கூடியதாகத் தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும். குடும்ப வாழ்க்கையில இருந்து வந்த சிக்கல்களும் சுணக்கங்களும் அவர்களுக்குத் தீரக்கூடியதாக இருக்கும்.
கல்வியில் முன்னேற்றம்
தனுசு ராசி மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வியில நல்ல முன்னேற்ற பலன் உண்டு. விரும்பிய துறையில் அவங்களுக்கு சீட்டு கிடைக்க போகிறது.
வெளிநாட்டு வாய்ப்புகள்
தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம்
பெரிய வெற்றிகளை அடையக்கூடிய சூழ்நிலையைத் தரும் எதிர்பார்த்திடாத தனவரவு இருந்தே தீரும் இந்த ஒன்ரை வருஷமா என்னதான் முயற்சி பண்ணா கூடக் கையில காசு வச்சு செலவு பண்ண முடியலைன்னு நினைச்சிட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு பண்ணக்கூடிய ஒரு பொற்காலம் இந்தக் காலம்.
தொழில் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய நாலாவது இடத்தில தொழிலுக்குரிய சனி பகவானே போய் அமரும்போது தொழில் வெற்றியைக் காண்பீர்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கு தயாராவீர்கள். கூட்டுத் தொழிலில் கவனமாக இருக்கவும் இதனால் வரை உங்களது திறமை வெளியே வராமல் இருந்திருக்கலாம். ஆனால் இனிவரும் காலங்களில் உங்களிடம் அசாத்திய திறமைகள் வெளிப்படும். அதேசமயம் தொழிலில் உயர்வு ஏற்படும்.
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக அமைய காத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் வளர்ச்சி மற்றும் லாபம் கிடைக்கும். கட்டிடத் தொழில், மளிகை கடை, விவசாயத்துறை, ஜவுளிக்கடை போன்ற சொந்த முதலீடு செய்யும் அனைவருக்கும் நல்ல லாபகரமான ஆண்டாக அமையும்.தொட்டதெல்லாம் தொடங்கக்கூடிய ஒரு அற்புதமான காலம் அடுத்த 12 மாசம் இதில் ஏற்படும் லாபத்தால் சொத்துகள் சேரும்.
பரிகார வழிபாடுகள்
ஞாயிறு வழிபாடு: பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் இதர உணவுகள் வழங்குவது சாலச் சிறந்ததாகும். இதனால் 9ல் இருக்கும் கேதுவால் எந்தத் தொந்தரவும் இருக்காது.
கஞ்சனூர் வழிபாடுகள்: கஞ்சனூர் சுக்கிர பகவான் கோவில் உள்ளது அங்குச் சென்று வணங்கி வரவும். மூன்று பெயர்ச்சி வருகிறது.உங்கள் வாழ்வில் ஏற்றத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும்.
பழனி முருகன்: தனுசு ராசியில் பிறந்த அனைவரும் பழனி முருகன் வணங்கி வர அனைத்து பலன்களையும் பெறலாம்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு: குரு பகவானின் அருளைப் பெற வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும். முடிந்தால், கருப்பு கொண்டைக்கடலையை சுண்டலாக்கி, கோவிலில் அன்னதானமாக வழங்கவும். இது அர்தாஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.
கவனம்
ஒன்பதாம் இடத்தில் கேது இருப்பதால், தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் வரலாம். தந்தையுடன் உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் தவறுகளால் உங்களுக்கு பெயர் கெடும் அபாயம் உள்ளது.
நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகினால், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தவறான பழக்கவழக்கங்கள் உங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கலாம்.
2025-ல் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். சில சவால்கள் இருந்தாலும், மேற்கூறிய எச்சரிக்கைகளைக் கவனித்து, வழிபாடுகளை மேற்கொண்டால், இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமையும். இறைவனின் அருளால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள்